Question:

ஓட்டிசம் நிலைமையை பூரணமாகக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் உள்ளனவா?

Answer:

ஓட்டிசம் என்பது நோயல்ல. எனவே அது மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. இது வாழ்நாள் வரையில் நீடிக்கும் நிலைமையாகும். ஆனால் ஓட்டிச இயல்புகளைக் குறைப்பதற்கென்று இடையீடுகள் (Interventions) உள்ளன. இவ்விடையீடுகளைக் காலதாமதமின்றி ஆரம்பித்தால் இந்நிலைமை கடுமையடைவதனைத் தடுத்து இக் குழந்தைகளும் ஓரளவுக்கேனும் சாதாரண குழந்தைகள் போல் செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.