Opening hours:
Week Days: 8.00am -4.00pm
Saturdays: 8.00am-12.00noon
Q & A:
Q:
ஓட்டிசம் நிலைமையை பூரணமாகக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் உள்ளனவா?
A:
ஓட்டிசம் என்பது நோயல்ல. எனவே அது மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. இது வாழ்நாள் வரையில் நீடிக்கும் நிலைமையாகும். ஆனால் ஓட்டிச இயல்புகளைக் குறைப்பதற்கென்று இடையீடுகள் (Interventions) உள்ளன.
உங்கள் கேள்விகள்
Smart Slider with ID: 2
ஓட்டிசத்திற்கான ஒரு கொள்கையின் அவசியம்
Dr. ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்
ஓட்டிசம் நிலைமையானது உலகெங்கணும்போல் எமது நாட்டிலும் தற்பொழுது அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எமது மாகாணத்திலும் ஓட்டிசம் உடைய பல பிள்ளைகள் வைத்திய நிபுணர்களினாலும், ஆசிரியர்களாலும், மற்றும் இந்நிலைமை பற்றிய விழிப்புணர்வுடைய பெற்றௌராலும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். எமது மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பிள்ளைகள் மற்றும் வளர்ந்தோர் ஓட்டிச இயல்புகளை உடையவர்களாக இருக்கிறார்கள் எனும் புள்ளிவிபரங்கள் எம்மிடம் இல்லை. ஆயினும், அது பல நூறுகளாக இருக்கலாம் எனவே நிபுணர்களால் கணிப்பிடப்படுகின்றது. முக்கியமாக இந்நிலைமை இனிவருங்காலங்களில் இன்னமும் அதிகரித்துக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓட்டிசம் எனும் நிலைமை பிள்ளையின் மூளைவிருத்தி தொடர்பான பிரச்சினைகளையும் சவால்களையும் கொண்டிருப்பதனால், அந்த நிலைமையை நேரகாலத்திற்கே அடையாளங்கண்டு, தகுந்த இடையீடுகளை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆயினும், எவ்வளவு வேளைக்கு அடையாளங் காண்பது? யார் அடையாளங் காண்பது? எப்படி அடையாளங் காண்பது? ஓட்டிசம் இருக்கின்றது என அடையாளங் கண்ட பின்பு எவ்வாறான இடையீடுகளை மேற்கொள்வது? இதில் சுகாதாரத் துறையினரது பங்கு என்ன? கல்விப் புலத்தின் கடப்பாடு என்ன? இந்தப் பிள்ளைகள் வளர்ந்ததன் பின்பு அவர்கள் தமது சூழலோடு இணைந்து கொண்டு கௌரவமான ஒரு வாழ்வைக் கொண்டு செல்வதற்கு ஒரு சமூகமாக எவ்வாறு உதவலாம்? இந்தப் படிமுறையில் சமூக சேவைகள். பொருளாதார அபிவிருத்தி தொடர்பான துறைகள், மற்றும் தொழிற் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், தொழில் வழங்குநர்கள் எவ்வாறு உதவலாம்? ஓட்டிசம் நிலைமையுடைய பிள்ளைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு தேவையேற்படுகின்ற பட்சத்தில் எவ்வாறான வலுவுட்டல்கள் மற்றும் உதவிகளை வழங்கலாம்? ….. போன்ற பல விடயங்கள் பற்றி இதுவரை எம்மிடத்தில் தௌிவான பார்வைகளோ, ஒருமித்த கருத்துகளோ இருக்கவில்லை. பெரும் யானையொன்றின் பல்வேறு பகுதிகளைப் பார்த்து, அப்பகுதிகளையே யானையின் உருவம் என நினைத்தவர்கள்போல் நாம் இருக்கின்றௌமோ? எனும் ஓர் ஐயம் ஏற்படுகின்றது.
இந்தப் பின்னணியில், ஓட்டிசம் தொடர்பான எமது மாகாணத்துக்கான கொள்கை ஒன்றினை உருவாக்க வேண்டிய ஒரு தேவை எழுந்துள்ளது. எமது மாகாணத்தின் கல்வி, சுகாதாரம் சார்ந்த இரண்டு அமைச்சுக்கள் ஏனைய பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களின் பங்களிப்போடு இந்தக் கொள்கை வகுப்பின் ஆரம்பப் படிநிலைகளைப் பூர்த்தி செய்திருக்கின்றௌம்.
யாழ். மருத்துவ சங்கத்தின் வருடாந்த மருத்துவ மாநாட்டிற்கு முன்னரான நிகழ்வுகளில் ஒன்றாக ஓட்டிசம் தொடர்பான கருத்தமர்வொன்று 2018.08.02 அன்றுகாலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 1 மணிவரை யாழ் பொது நூல் நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வளவாளர்களாக, தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கடமையாற்றும் திருமதி. டு. பாக்யவதி (Rehabilitation Psychologist) மற்றும் திரு. ஜோசப் ( Occupational Therapist ) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றிய உளமருத்துவ நிபுணர் சா. சிவயோகன் கருத்தரங்கின் வளவாளர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மூளை மற்றும் விருத்திசார்; கோளாறுடைய பிள்ளைகளுக்கான சிகிச்சைப் பிரிவில், பேராசிரியர். போல் ரசல் அவர்களோடு இணைந்து பணியாற்றுகின்றார்கள் எனவும், அவர்கள் ஓட்டிசம் நிலைமையூடைய பிள்ளைகளுடன் பணியாற்றுவதில் மிகுந்த தகைமையையூம், நீண்டகால அனுபவத்தையூம் கொண்டவர்களாக விளங்குகின்றனர் எனவும் குறிப்பிட்டார். மேலும், இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறுவது மிகவும் பயனுள்ளதாக அமையூம் எனவும் உளமருத்துவ நிபுணர் குறிப்பிட்டார்.