மாதவம் பற்றி

மாதவம் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழ் வருகின்ற மூளை மற்றும் நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய நிலைமைகளை அடையாளங் கண்டு, பொருத்தமான இடையீடுகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும் ஒரு வள நிலையமாகும். 

இந்த நிலையம் 02-04-2014 ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் இயங்கிய இந்த நிலையம், 2017ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் 118/10, சிவராஜா அவெனியு, பலாலி வீதி, திருநெல்வேலி எனும் முகவரியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறிஸ்தவ வைத்தியசாலையின் சிறுவர் உளமருத்துவப் பிரிவில் பயிற்சி பெற்ற ஒருவரைப் பிரதானமான வளவாளராகக் கொண்டு சேவைகளை வழங்கத் தொடங்கிய மாதவமானதுஇ தற்பொழுது ஓரளவு விருத்தியடைந்து, பகுதி நேரமாகக் கடமையாற்றும் சிறப்புத் தேர்ச்சி (Diploma in Psychiatry)   பெற்ற ஒரு வைத்திய உத்தியோகத்தரையும், சிறுவர் உளவளத் துணையாளர்களாகக் கடமை புரியக் கூடிய இரண்டு சுகாதாரத் திணைக்களப் பணியாளர்களையும், ஒரு பேச்சு மற்றும் மொழி தொடர்பான சிகிசசையாளரையும், இன்னுமொரு உதவிப் பணியாளரையும் கொண்டு இயங்கி வருகின்றது. இவர்களோடு இந்நிலையத்திற்கு ஒரு உளமருத்துவ நிபுணர், ஒரு குழந்தை வைத்திய நிபுணர், ஒரு பொது வைத்திய நிபுணர் என்போர் வருகை வளவளர்களாகப் பங்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

மாதவத்தின் வளர்ச்சியில் பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் காத்திரமான பங்காற்றி வருகின்றார்கள். அவ்வாறான நிறுவனங்களுள்  சர்வதேச மருத்துவ நிறுவனம் (IMHO), மனித நேயம், செரண்டிப் நிறுவனம்இ உளநல சங்கம் ஆகியவை அடங்குகின்றன.