தொடர்ச்சி …..

தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள வடமாகாணத்திற்கான ஓட்டிசம் கொள்கை அறிக்கையின் வரைபானது கூட்டு முயற்சி ஒன்றின் உச்சவிளைவாக அமைந்திருக்கின்றது. இதனை உருவாக்குவதில் எமது மாகாணத்தைச் சேர்ந்த பல திணைக்களங்களின் பிரதிநிதிகளும், துறைசார் நிபுணர்களும், ஆர்வலர்களும், பெற்றௌரும் மட்டுமல்லாது, இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஏனைய பல வளவாளர்களும் தமது பங்களிப்புகளை நல்கியூள்ளார்கள். இவர்களது கருத்துக்களோடு, இலங்கைளின் தேசிய மட்டக் கொள்கைகளும், உலகின் பல நாடுகளில் இருக்கும் கொள்கைகளும் ஆராயப்பட்டு, அவற்றில் உள்ள நடைமுறைச் சாத்தியமான நல்ல கருத்துக்கள் பலவூம் உள்வாங்கப்பட்டடு இந்தக் கொள்ளை அறிக்கையின் வரைபு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கொள்கையினை உருவாக்கிய வளவாளர்கள் பல தடவைகள் தம்முள் கூடிக் கதைத்தார்கள். வேலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். மீண்டும், மீண்டும் திருத்தங்களை மேற்கொண்டு கொள்கையின் வரைபைச் செழுமைப்படுத்தினார்கள். இந்த வரைபை எழுத்துருவாக்குவதிலும், அதனை மொழிபெயர்ப்பதிலும் பலர் தன்னார்வத்தோடு தம்பணி நல்கியிருந்தார்கள். காலத்தின் தேவை கருதி இவர்கள் அனைவரும் ஆற்றிய பணிகளை வெறுமனே “நன்றி” என்று சொல்லி நலிவாக்கிவிட நான் விரும்பவில்லை.

நான் இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூறியாக வேண்டும். இந்தக் கொள்கையை கல்வி, சுகாதாரம் எனும் இரண்டு அமைச்சுக்கள் சேர்ந்து வெளியிடுவது பொருத்தமானது என இந்தக் கொள்கை வரைபினை ஆக்கியவர்கள் கருதுகிறார்கள். இதுபற்றியும் நாம் சேர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. ஓட்டிசம தொடர்பான இந்தக் கொள்கை வரைபானது

கற்றறிந்தோர், பொறுப்புடையோர், ஆர்வலர்கள் என்போரதும், பொதுமக்களினதும் கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்தப்பட்டு, அதற்கான சட்ட அங்கீகாரம் கிடைக்கப்பெற வேண்டும். பின்பு இந்தக் கொள்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை எவ்வாறு இணைந்து நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான பொறிமுறை ஒன்றினை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.