நிதியுதவி

மாதவம் தனது சேவைகளை முழுக்க முழுக்க இலவசமாகவே வழங்கி வருகின்றது.

மாதவம் சுகாதாரத் திணைக்களத்தின் ஒர் பகுதியாக இயங்கினாலும், இதன் சேவை வழங்கலானது ஒரு புதிய உருவாக்கமாக இருப்பதனால் மாதவம் நிலையத்திற்குத் தேவையான வளவாளர்களைப் பெறுவதிலும், இந்நிலையத்திற்குத் தேவையான பௌதிக அபிவிருத்திகள் மற்றும் சிகிச்சையுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும் இடர்பாடுகள் காணப்படுகின்றன.

அத்துடன் ஓட்டிசம் தொடர்புடைய பரப்புரைகளை வினத்திறனுடன் தொடர்ச்சியாகச் செய்வதிலும், விழிப்புணர்வை மேலும் பரவலாக்குவதிலும் எல்லைப்படுத்தல்கள் இருக்கின்றன.

இவற்றை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்வவதற்கு எமக்கு மேலதிகமான நிதியுதவி தேவைப்படுகின்றது.

மாதவத்திற்கென வழங்கப்படும் நிதியானது மாதவத்தின் சேவைகளோடு தொடர்புபட்ட விடயங்களிற்கு மாத்திரம் உபயோகிக்கப்படும் என நாம் உறுதி கூறுகின்றோம். இந்த நிதியுதவிகள் யாவும் உளநல சங்கம் (Mental Health Society) எனும் நீண்டகாலம் பதிவு செய்யப்பட்ட, கணக்காயவுக்குட்படுத்தப்படும் நிறுவனத்தினூடாக முகாமைத்துவம் செய்யப்படும்.

Mental Health Society

Mental Health Society is a local non-governmental organization, which started in 1964 in the name of Friends of Psychiatry and later changed its name as Mental Health Society (MHS). MHS is especially dedicated to the wellbeing of people and families with mental health problems by providing support, assistance and services, and complementing the existing mental health services within the health department. It is a registered organization (Reg. no: SS/DS/VN/1998/01) with a full-time admin assistant and is governed by a management council with honourary members.

In the past MHS has worked in partnership with a range of international and national agencies, including but not limited to UNICEF, Canadian High Commission, CAMH in Toronto, IMHO, ZOA and Sarvodaya. At present its main collaboration is with IMHO.

MHS could be contacted through 

Please find its account details below.